20
இலங்கையில் தற்போது நிலவிவரும் சீரற்ற காலநிலையால் பல்வேறு மாகாணங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 60 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், வடக்கு மாகாணத்தில் வெள்ளம் வடிந்தோடாமல் வெள்ள வாய்க்கால்களை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடங்களை இடித்து அகற்றுமாறு சமந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் பணிப்புரை விடுத்துள்ளார்.
இது குறித்து மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள இடர் நிலைமை தொடர்பில் ஆராயும், இணையவழி கலந்துரையாடல் நேற்று (28-11-2024) காலை இடம்பெற்றது.
இதன்போதே ஆளுநர் இந்த விடயத்தைச் சுட்டிக்காட்டினார்.