17
அல்கஹோல் மற்றும் மருத்துவ தகவல் மையத்தின் (ADIC) தகவலின்படி, கடந்த 10 வருட காலப்பகுதியில் சிகரெட் விற்பனை சுமார் 50% குறைந்துள்ளது என்று புள்ளிவிபர தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் கடந்த காலத்தை கருத்தில் கொண்டு, சிகரெட் உற்பத்தி நிறுவனங்களின் லாபம் இரு மடங்காக அதிகரித்துள்ளது என அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
இலாபம் எவ்வாறு உயர்ந்தது
எந்தவொரு தொழிற்துறையிலும் விற்பனை 50% வீழ்ச்சியடையும் போது இலாபம் எவ்வாறு உயர்ந்தது என தற்போதைய அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக, ஒரு குறிப்பிட்ட பொருளின் விற்பனை குறையும் போது, அது தொடர்பாக கிடைக்கும் வருமானம் குறைவதுடன், கிடைக்கும் லாபமும் குறைவடையும் என்று சுட்டிக்காட்டப்படுகிறது.