உலகின் மிக வயதான நபர் காலமானர்!

by guasw2

உலகின் மிக வயதான மனிதர் தனது 112 வயதில் காலமானதாக அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஜோன் அல்பிரட் டினிஸ்வுட் என்ற இவர் நேற்று, அவர் வசித்து வந்த இங்கிலாந்தின் சவுத்போர்ட் பராமரிப்பு இல்லத்தில் காலமானதாக கூறப்படுகிறது.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், ஜுவான் விசென்டே பெரெஸ் மோரா என்பவர் தனது 114 வயதில் இறந்த பின்னர், உலகின் மிக வயதான மனிதராக ஜோன் அல்பிரட் டினிஸ்வுட் கருதப்பட்டார்.

டைட்டானிக் கப்பல் மூழ்கிய 1912 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 ஆம் திகதி பிறந்த டினிஸ்வுட், 2020 ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் வயதான மனிதராக அறிவிக்கப்பட்டார்.

ஏப்ரல் 2024 இல் உலகின் மிக வயதான மனிதராக கின்னஸ் சாதனை புத்தகத்தாலும் அங்கீகரிக்கப்பட்டார். இந்தநிலையில் அவர், இரண்டாம் உலகப் போரின் போது ரோயல் இராணுவத்தில் பணியாற்றியுள்ளார்.

முன்னதாக, 116 ஆண்டுகள் மற்றும் 54 நாட்கள் வரை வாழ்ந்த ஜப்பானைச் சேர்ந்த ஜிரோமோன் கிமுரா என்பவரே, மிகவும் வயதானவர் என்று கருதப்பட்ட நிலையில், 2013 இல் காலமானார்.

இந்தநிலையில், தற்போது வாழ்ந்துக்கொண்டிருக்கும் 116 வயதாகும் ஜப்பானைச் சேர்ந்த டோமிகோ இடூகா, என்ற பெண்ணே உலகிலேயே மிகவும் வயதான பெண்மணி என்று கருதப்படுகிறார்.

தொடர்புடைய செய்திகள்