20
சீரற்ற வானிலை காரணமாக பண்டாரவளை பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து இன்று (26) காலை 7 மணியளவில் இடம்பெற்றதாக பதுளை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
பண்டாரவளை பிரதேசத்தில் வசிக்கும் 61 வயதுடைய பெண் ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
சடலம் பண்டாரவளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரவளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்