மின் கட்டண திருத்தம் தொடர்பில் வெளியகியுள்ள அறிவிப்பு!

by admin

மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் உண்மைக்கு புறம்பான அறிக்கைகளை வன்மையாக நிராகரிப்பதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

2014-2022 காலப்பகுதியில், மின்சார சபை செலவினங்களை அங்கீகரித்த போதிலும், ஒழுங்குமுறை அதிகாரிகள் அதற்கேற்ப மின் கட்டணத்தை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்காததால், கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக மின்சார சபை வௌியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தற்போதுள்ள வழிமுறையின்படி, 2024 இன் கடைசி காலாண்டில் திட்டமிடப்பட்ட செலவானது, இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளின் வருமானத்தை 2014 – 2022 காலப்பகுதியில் பெறப்பட்ட கடனைத் திருப்பிச் செலுத்துதல் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு, 24.10.2024 அன்று இலங்கை மின்சார சபையினால் 6% முதல் 11 வரையிலான மின் கட்டணங்களைக் குறைக்கும் முன்மொழிவை மின்சாரத் துறை கட்டுப்பாட்டாளர் நிராகரித்தார்.

2024 இன் கடைசி காலாண்டிற்காக அல்லாமல், 2025 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களுக்கு 01.01.2025 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் கட்டணத் திருத்தத்திற்கான முன்மொழிவை மீண்டும் அனுப்புமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கோரியுள்ளதாக தொடர்புடைய அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டிற்கான புதிய முன்மொழிவை ஒழுங்கான முறையில் சமர்ப்பிக்க இலங்கை மின்சார சபைக்கு போதுமான கால அவகாசம் தேவை என்றும், 06.12.2024 இற்கு முன்னர் இந்த முன்மொழிவு ஒழுங்குமுறை அதிகாரிக்கு அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டின் முதல் 3 காலாண்டுகளில் முறைமையை மாற்றுவதற்கான ஒழுங்குமுறை அதிகாரிகளின் முடிவு காரணமாக, 2024 ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் இலங்கை மின்சார சபை விலையை குறைக்க அனுமதிக்கப்படவில்லை என்று மின்சார சபை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சாரச் செலவுகளை மதிப்பிடுவதும் கட்டணத் திருத்தங்களை முன்வைப்பதும் இலங்கை மின்சார சபையின் பணியாகும், மேலும் நுகர்வோருக்கு நியாயமான கட்டணத் திருத்த முன்மொழிவை முன்வைப்பதற்கு போதுமான நேரத்தை எடுத்துக்கொள்வதாக இலங்கை மின்சார சபை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்