புதிய அரசாங்கத்தில் அமைச்சர்களுக்கான வாகனங்கள் தொடர்பில் வெளியாகிய செய்தி!

by smngrx01

அமைச்சரவை மற்றும் பிரதி அமைச்சர்கள் முந்தைய அரசாங்கத்தில் அமைச்சர்கள் பயன்படுத்திய உத்தியோகபூர்வ வாகனங்களைப் பயன்படுத்துவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய அனைத்து அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் உத்தியோகபூர்வ சொகுசு அல்லாத, எரிபொருள் திறன் கொண்ட வாகனம் வழங்கப்படும் என்று அரசாங்கம் மீண்டும் அறிவித்துள்ளது

344 அரச வாகனங்கள்
இதன்படி, அனைத்து 159 அரசாங்க நாடாளுமன்ற ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு அதிகார பூர்வ வாகனம் இருக்கும். அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள், தமது அமைச்சுக்களை மேற்பார்வையிட்ட முன்னைய அமைச்சர்களுக்கு அந்தந்த அமைச்சுகளால் ஒதுக்கப்பட்ட வாகனங்களைப் பயன்படுத்துவார்கள்.

அந்தவகையில், 344 அரச வாகனங்களை அடையாளம் கண்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்தநிலையில், v8s போன்ற சொகுசு வாகனங்கள் மற்றும் அதிக செலவில் பழுதுபார்ப்பு தேவைப்படும் வாகனங்கள் மற்றும் அரசு பராமரிப்பதற்கு செலவு அதிகமாகக் கருதப்படும் வாகனங்களை பகிரங்கமாக ஏலம் விட்டு, அதன் மூலம் கிடைக்கும் தொகையை அமைச்சர்களாக இல்லாத அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகனங்களை கொள்வனவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்