மாவீரர் நினைவேந்தல் தொடர்பில் ஜனாதிபதியிடம் முன் வைக்கப்பட்டுள்ள கோரிக்கை!

by sakana1

புதிய ஜனாதிபதி நல்லிணக்கத்தின் முதல் படியாக மாவீரர் நினைவேந்தலுக்காக துயிலுமில்லங்களிலிருந்து இராணுவத்தை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் சி.வேந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

பருத்தித்துறை பகுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “வழமையாக மாவீரர் நாளில் காவல்துறையினர், மற்றும் உளவுத்துறையினர் மாவீரர் நிகழ்வுகளில் குழப்பம் விளைவிப்பதில்லை.

மாவீரர் நிகழ்வு
அவர்கள் பல்வேறு தடைகள் போடுவதுமாக நெருக்கடிகளை கொடுத்து வந்தனர்.

இந்நிலையில், இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தப்போவதாக அநுர குமார திசநாயக்க தெரிவித்திருந்தார்.

அந்த வகையில், நல்லிணக்கத்தின் முதலாவது நிகழ்வாக மாவீரர் நினைவேந்தலை சுதந்திரமாக மேற்கொள்ள அனுமதியளிக்க வேண்டும்.

அத்துடன், மாவீரர் துயிலும் இல்ல காணிகளிலிருந்தும் இராணுவம் வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்