24
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக விஜய் படங்களில் நடிப்பதில் இருந்து முழுவதுமாக விலகி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை அண்மையில் தொடங்கினார்.
இதனையடுத்து தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கடந்த ஒக்டோபர் 27ஆம் திகதி பிரமாண்டமாக நடைபெற்று முடிந்துள்ளது.
இந்த மாநாட்டில் இலட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர்.
இந்த நிலையில் குறித்த மாநாட்டிற்கு நிலங்கள் வழங்கிய விவசாயிகளுக்கு விருந்தளிக்கும் நிகழ்வு தற்போது சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்று வருகின்றது.
மேலும், குறித்த நிகழ்வில் கலந்துகொண்ட விஜய் இதன்போது விவசாயிகளுக்கு நன்றி தெரிவித்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.