வெளிநாட்டில் பிணிபுரியும் இலங்கை தொழிளார்களுக்கான முக்கிய தகவல்!

by smngrx01

குவைத் (Kuwait) மாநிலத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் வெளிநாட்டினர் தங்கள் கைரேகையை வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கைரேகைகளை வழங்குவதற்கான கால அவகாசம் டிசம்பர் 31, 2024 அன்று முடிவடையும் என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைய இருந்த கால அவகாசம் இவ்வாறு டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குவைத்தில் பணிபுரியும் அனைத்து இலங்கை பணியாளர்களும் உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் கைரேகைகளை சமர்ப்பிக்குமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கேட்டுக்கொண்டுள்ளது.

வங்கி நடவடிக்கைளுக்கு தடை

குவைத்தில் “சாஹேல்” மென்பொருள் மூலமாகவோ அல்லது “மட்டா” எனப்படும் மின்னணு முறை மூலமாகவோ கைரேகைகளை பதிவு செய்யலாம் என குறிப்பிடப்படுகிறது.

இதேவேளை, கைரேகையை வழங்காத வெளிநாட்டினரின் அனைத்து அரசு மற்றும் வங்கி நடவடிக்கைகளும் தடைபடும் என்றும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்