தமிழர் ஒருவருக்கு பிரதியமைச்சர் பதவி!

by wp_fhdn

 பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சராக பதவியேற்ற சுந்தரலிங்கம் பிரதீப் இன்று (22) காலை அமைச்சில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

மேலும் இந்நிகழ்வில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன மற்றும் தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.தேசிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிட்டு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவான சுந்தரலிங்கம் பிரதீப், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்