9
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு பெறும் குடும்பங்களில் 70 வயதைப் பூர்த்தி செய்த முதியோர்களுக்கான கொடுப்பனவான 3,000 ரூபாய் கொடுப்பனவை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த உதவித்தொகை இந்த மாதம் முதல் அஸ்வெசும பெறும் முதியவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளது.
நலன்புரி நன்மைகள் சபை இதனைத் தெரிவித்துள்ளது.