முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிடியானை!

by adminDev

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு (Douglas Devananda) கொழும்பு மேலதிக நீதவான் பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.

குறித்த பிடியாணை இன்றையதினம் (21.11.2024) பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வெள்ளவத்தையைச் சேர்ந்த சுப்பிரமணியன் மனோகரன் என்ற வர்த்தகர் இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான காசோலைகளை வழங்கி மோசடி செய்ததாக டக்ளஸ் தேவானந்தா செய்த முறைப்பாட்டின் பிரகாரம், அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகாத காரணத்தினால் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, இரகசிய காவல்துறையினரால் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் டக்ளஸ் தேவானந்தா நோய்வாய்ப்பட்டிருப்பதால் அவர் நீதிமன்றில் முன்னிலையாக மாட்டார் என அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தெரிவித்துள்ளார்

எனினும் டக்ளஸ் தேவானந்தாவின் சுகவீனம் தொடர்பான மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்கப்படாத காரணத்தினால் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இரு தரப்பு வாதத்தையும் பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான், சாட்சிக்கு பிடியாணை பிறப்பித்து, விசாரணையை ஜனவரி 23ம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

தொடர்புடைய செய்திகள்