ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு பேர் கைது!

by adminDev

ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடவட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொனஹேன பிரதேசத்திலும் தொம்பே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெகடன பிரதேசத்திலும் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அங்கு சந்தேகநபர்களிடம் இருந்து 03 கிலோ 536 கிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதுடன், போதைப்பொருள் விற்பனை ஊடாக ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு கோடியே பத்து இலட்சம் ரூபா பணமும், 03 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் கார் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் டுபாயில் பதுங்கியிருக்கும் சக்திவாய்ந்த போதைப்பொருள் வியாபாரி ஒருவரின் நெருங்கிய உறவினர்கள் என தற்போதைய விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்