15
முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை எனவும் அறிவித்துள்ளார்.
கண்டி தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்ட பின், தனது அரசியல் எதிர்காலம் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே விஜயதாச ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார்.
மீண்டும் பாராளுமன்றத்திற்கு வருவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா என்று கேட்டபோது, அதனை அவர் நிராகரித்தார்.
பாராளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களும் ஊழல்வாதிகள் என்று குறிப்பிடப்பட்ட கதையின் ஒரு பகுதியாக இருக்க தனக்கு விருப்பமில்லை என்றும் விஜயதாச ராஜபக்ஷ கூறினார்.