on Wednesday, November 20, 2024
பொய்யான ஆவணங்களுடன் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்ள முயற்சித்த 12 பெண்கள் உட்பட 18 பேர் பத்தரமுல்ல பெலவத்தை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் நேற்று காலை கைது செய்யப்பட்டுள்ளர்.
கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்வதற்காக போலி இலக்கங்கள் மற்றும் உத்தியோகபூர்வ முத்திரைகள் கொண்ட ஆவணங்களை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு சமர்ப்பித்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடவுச்சீட்டு பெறுவதற்காக திணைக்களத்திற்கு வரும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிப்பவர்கள் அனைவரும் உத்தியோகபூர்வ முத்திரை மற்றும் ஆவணங்களில் இலக்கங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும்.
இந்த குழுவினர் அந்த இலக்கங்களை நுட்பமாக மாற்றியமைத்து போலியாக ஆவணங்கள் தயாரித்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திணைக்களத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய படிவத்தின் மேல் எழுதப்பட்ட மேல் மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் கயங்க மாரப்பனவின் உத்தியோகபூர்வ முத்திரையும் போலியாக உருவாக்கப்பட்டு முத்திரையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.