ஐக்கிய மக்கள் சக்தி ஊடாக வன்னிக்கு மேலும் ஒரு தேசியபட்டியல்

by wp_fhdn

ஐக்கிய மக்கள் சக்தி ஊடாக வன்னிக்கு மேலும் ஒரு தேசியபட்டியல் வன்னிதேர்தல் மாவட்டத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி ஊடாகமேலும் ஒரு தேசியபட்டியல் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைக்கப்பெற்றுள்ளது.

அந்தவகையில் பாராளுமன்ற உறுப்பினர் றிசாட்பதியூதீனின் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரசின் முக்கியஸ்தரான முஹம்மது இஸ்மாயில் முத்துமுஹம்மது என்பவருக்கே குறித்த தேசியபட்டியல் வழங்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை மக்கள் காங்கிரசானது இம்முறை பொதுத்தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் தனித்து போட்டயிட்டு ஒரு ஆசனத்தை பெற்றுக்கொண்டதுடன், வன்னி உட்பட ஏனைய மாவட்டங்களில் ஐக்கியமக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிட்டிருந்தது.

அந்தவகையில் ஐக்கியமக்கள் சக்திக்கு கிடைக்கப்பெற்ற ஐந்து தேசியபட்டியல் ஆசனத்தில் ஒன்றுஅகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கு வழங்குவதற்கு   தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கட்சியின் நீண்டகால உறுப்பினரும் முக்கியஸ்தருமான முஹம்மதுஇஸ்மாயில் முத்துமுகமது என்பவருக்கு குறித்த பிரதிநித்துவம் வழங்கப்பட்டுள்ளது.

இவரது நியமனத்துடன் வன்னிமாவட்டம் 9 பாராளுமன்ற பிரதிநித்துவங்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்