“கிரிக்கெட் பந்து கண்ணில் பட்ட காயத்தினால் கண்பார்வையை இழந்தேன்” – இலங்கையின் முதலாவது விழிப்புலன் இழந்த நாடாளுமன்ற உறுப்பினர் ! on Wednesday, November 20, 2024
கண்ணில் சிறிது காயம் ஏற்பட்டால் கூட அதனை அலட்சியம் செய்யவேண்டாம் என இலங்கை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள முதலாவது விழிப்புலன் இழந்த நாடாளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வா தான் கண்பார்வை இழந்த கதையை ஊடகமொன்றுடன் பகிர்ந்துகொண்டுள்ளதுடன்,11 வயதில் கிரிக்கெட் விளையாடும்போது பந்து கண்ணில் பட்டதால் தான் கண்பார்வையை இழந்ததாக தெரிவித்துள்ளார்.
பந்தைபிடிப்பதற்கு எனது கரங்களை பயன்படுத்தாதது எனமுதல் தவறு இரண்டாவது தவறு என காயங்களை குடும்பத்தவருக்கு மறைத்தது என தெரிவித்துள்ள அவர் இது நான் கண்பார்வை இழக்கும் நிலையை ஏற்படுத்தியது என குறிப்பிட்டுள்ளார்.
உங்கள் கண்ணில் சிறுதூசி விழுந்தால் கூட மருத்துவமனைக்கு செல்லுங்கள் என்பதே எனது அறிவுரை,இந்த காயங்கள் நாங்கள் எதிர்பாராத பாதிப்பை ஏற்படுத்தலாம் என சுகத் வசந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.
கண்பார்வை இழந்தவர்களின் வாழ்க்கை மிகவும் சவாலானது கடினமானது இவ்வாறான கண்காயங்களை புறக்கணித்தால் மக்களால் அதிலிருந்து மீள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி இவரை தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.