வாழ்க்கைச் செலுவு அதிகரிப்பு: கிறீசில் பொது வேலை நிறுத்தப் போராட்டம்!

by adminDev

கிரீஸில் உள்ள தொழிலாளர்கள் 24 மணி நேர பொது வேலைநிறுத்தத்தின் ஒரு பகுதியாக புதன்கிழமை பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டமானது கப்பல் மற்றும் தொடருந்து போக்குவரத்துகளை நிறுத்தியது. பள்ளிகளை மூடியது மற்றும் நாடு முழுவதும் கட்டுமானப் பணிகளை நிறுத்தியது. 

வாழ்க்கைச் செலவு உயர்வைக் கண்டித்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன . பொதுத்துறை பிரதிநிதிகள் 10% ஊதிய உயர்வு மற்றும் 2010 இல் தொடங்கிய கிரேக்கத்தின் ஏறக்குறைய தசாப்த கால நிதி நெருக்கடியின் போது குறைக்கப்பட்ட 13 மற்றும் 14 வது மாத சம்பளத்தை திரும்பக் கோருகின்றனர்.

விலைகள் மற்றும் வாடகைகள் உயர்ந்துள்ளன. அதே நேரத்தில் ஊதியங்கள் குறைந்த புள்ளியில் உள்ளன. 

தொழிலாளர்கள்  வாழ்க்கையை நடத்துவதற்கு கணிசமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனக் கோரி பெரும்பலானா சங்கங்களும் இந்த அழைப்பில் இணைந்து பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்