1
பாகிஸ்தானில் உள்ள பாதுகாப்புச் சாவடியில் ஒரு தற்கொலை குண்டுதாரி வாகனத்தை வெடிக்கச் செய்ததில் 12 படை வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்ததாக அதிகாரிகள் இன்று புதன்கிழமை தெரிவித்தனர்.
நேற்று செவ்வாய்க்கிழமை நடந்த தாக்குதலின் போது, வடக்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தின் சுற்றுச் சுவரில் தீவிரவாதிகள் வாகனத்தை மோதி, அருகில் உள்ள உள்கட்டமைப்புகளை சேதப்படுத்தியதாக இராணுவம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலுக்கு யார் காரணம் என்று இராணுவம் கூறவில்லை, ஆனால் ஹபீஸ் குல் பகதூர் என்ற இஸ்லாமிய தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.