பிள்ளையான் என அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று காலை முன்னிலையாகியிருந்த நிலையில் தற்போது அங்கிருந்து வெளியேறியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான சர்ச்சைக்குரிய வீடியோவை பிரித்தானிய சேனல்-4 கடந்த ஆண்டு ஜூன் 8ஆம் திகதி ஒளிபரப்பியது.
சுமார் 50 நிமிடங்கள் ஒளிபரப்பான குறித்த காணொளியில், சுவிட்சர்லாந்தில் தங்கியுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் அணியின் ஊடகப் பேச்சாளரான அசாத் மௌலானா தோன்றியிருந்தார்.
இந்நிழலையில் சம்பந்தப்பட்ட காணொளியின் உள்ளடக்கம் குறித்து ஆராயுமாறு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு முறைப்பாடு கிடைத்ததையடுத்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணையை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.