நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலைக் காரணமாக குழந்தைகள் மத்தியில் காய்ச்சல் அறிகுறிகள் அதிகரித்து வருவதாக கொழும்பு, சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தைகள் நல மருத்துவ ஆலோசகர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்தார்.
சீரற்ற காலநிலையால் குழந்தைகள் மத்தியில் இருமல், சளி, உடல்வலி மற்றும் அவ்வப்போது வாந்தி உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல் அறிகுறிகள் காணப்பட்டால், பெற்றோர் அவதானத்துடன் செயற்படுமாறு கொழும்பு, சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தைகள் நல மருத்துவ ஆலோசகர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்தார்.
குறிப்பாக மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால், குழந்தைகளின் அறிகுறிகளை உன்னிப்பாகக் அவதானித்து உடனடியாக மருத்துவ உதவியை நாடுமாறும் அவர் பெற்றோருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
எனினும், பாடசாலை மாணவர்களிடையே கை, கால் மற்றும் வாய் பகுதிகளில் புண்கள் அதிகரித்து வருவதாகவும் வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.
குழந்தைகளுக்கு உள்ளங்கைகள் மற்றும் கால்களில் சிறிய வெள்ளை கொப்புளங்கள் போன்ற அறிகுறிகள் இருந்தால், அதே போல் வாயில் பழுப்பு நிற செதில்களுடன் சிவப்பு தோல் வெடிப்பு இருந்தால், பெற்றோர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் சுகாதார அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்த அறிகுறிகளில் சில இன்ஃப்ளூவன்ஸாவின் அறிகுறிகளுடன் தொடர்புடையதென தெரிவிக்கப்படுகிறது.
இதனால் பெற்றோர்கள் விழிப்புடன் இருப்பது மற்றும் காய்ச்சல் தொடர்ந்தால் மருத்துவ ஆலோசனையைப் பெறுவது முக்கியம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.