பணத்தைப் பாதுகாப்பான முறையில் கொண்டு செல்லும் தனியார் நிறுவனம் ஒன்றின் சாரதியாக செயற்பட்ட ஒருவர் ஏழரை கோடி ரூபாவை கொள்ளைவிட்டுத் தப்பிச் சென்றுள்ள சம்பவம் ஒன்று மினுவாங்கொடை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
பணத்தைப் பாதுகாப்பான முறையில் கொண்டு செல்லும் தனியார் நிறுவனம் ஒன்று ஏழரைக் கோடி ரூபாய் பணத்தை வாகனத்தில் கொண்டு சென்றுள்ளனர்.
இதன்போது, குறித்த வாகனமானது மினுவாங்கொடை நகரில் நிறுத்தப்பட்டபோது, வாகனத்தின் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் வாகனத்தைவிட்டு இறங்கியுள்ளதையடுத்து, வாகனத்தை செலுத்திய சாரதி பணத்துடன் வாகனத்தை கடத்தி, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு அறியப்படுத்தியதை அடுத்து குறித்த வாகனம் கம்பஹா – உக்கல்பொட பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது, பணத்துடன் குறித்த சாரதி தப்பிச் சென்றிருந்த நிலையில், பொலிஸார் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்காக பொது மக்களின் உதவியையும் பொலிஸார் கோரியுள்ளனர். அந்தவகையில், சந்தேகநபர் தொடர்பான தகவல்களை 071 85 91 608 அல்லது 071 85 91 610 ஆகிய இலக்கங்களுக்கு அறியப்படுத்த முடியும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.