இந்தியாவுக்கும் (India) – இலங்கைக்கும் இடையிலான பங்காளித்துவத்தை மேலும் வலுப்படுத்த இணைந்து செயற்பட இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் (S. Jaishankar) அழைப்பு விடுத்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ள விஜித ஹேரத்துக்கு (Vijitha Herath) எஸ்.ஜெய்சங்கர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
இதன்படி நட்புறவின் வரலாற்று உறவுகளை வலுப்படுத்த தயாராக இருப்பதாக வாழ்த்து செய்தியில் பதிவிட்டுள்ளார்.
இந்தியா – இலங்கை
மேலும், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பங்காளித்துவத்தின் முக்கியத்துவத்தை இதில் எடுத்துக் கூறியுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க டிசெம்பர் மாதம் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக புதிய வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் (vijitha herath) தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தனது விஜயத்தின் போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன்(narendra modi) கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
புதிய அரசாங்கம் தேசத்தை பலப்படுத்தும் நோக்கில் இலங்கை நகர்கிறது என்பதை உலகிற்கு எடுத்துரைக்க உத்தேசித்துள்ளதாகவும், அதன் பிரஜைகளுக்கு நிலையான மற்றும் அழகான நாட்டை உறுதி செய்யும் எனவும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மேலும் குறிப்பிட்டுள்ளார்.