தமிழரசுக்கட்சியின் தேசியபட்டியல் ஆசனத்தை எம்.ஏ.சுமந்திரன் தரப்பின் ஆதரவாளராக ப.சத்தியலிங்கத்திற்கு வழங்க கட்சியின் அரசியற்குழு தீர்மானித்துள்ளமை வாதப்பிரதிவாதங்களை தோற்றுவித்துள்ளது.
கடந்த தேர்தலில் தமிழரசுக்கட்சிக்கு கிடைத்த ஒரு தேசியபட்டியல் ஆசனத்தை யாருக்கு வழங்க வேண்டும் என்பது தொடர்பாக நீண்ட விவாதங்கள் இடம்பெற்றிருந்தது.
விவாதங்களின் பின்னர் தேசியபட்டியல் ஆசனத்தை ஏற்கனவே வன்னி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்த ப.சத்தியலிங்கத்திற்கு வழங்குவதற்கு அரசியல் குழு தீர்மானித்துள்ளது.
அதேவேளை, தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்றக்குழு தலைவராக சிவஞானம் சிறிதரன் தெரிவுசெய்யப்பட்டார். நேற்றைய அரசியல் குழு கூட்டத்தின் போதே அந்த தீர்மானமும் எடுக்கப்பட்டிருந்தது.
மேலும், கட்சியின் பேச்சாளர் பதவி தொடர்பாக நாடாளுமன்ற முதலாவது அமர்வின் பின்னர் தீர்மானிக்கப்படவுள்ளதாக சி.சிறிதரன் தெரிவித்துள்ளார்.
எனினும் சத்தியலிங்கத்திற்கு தேசியப்பட்டியலை வழங்கியதன் மூலம் எம்.ஏ.சுமந்திரன் அடுத்துவருங்காலப்பகுதிகளில் ஆசனத்தை தனதாக்கிக்கொள்ள திட்டமிடுவதாக சர்ச்சைகள் மூண்டுள்ளது.