வடகிழக்கில் தொடர்ச்சியான இராணுவ பிரசன்னம் தமிழ் மக்களிடையே அசாதாரண சூழலையே தோற்றுவித்துவருகின்றது.
மன்னார், விடத்தல்தீவு பகுதியில் உள்ள இராணுவ முகாமில் சுமார் 25 இராணுவத்தினர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
காய்ச்சல் தொற்றையடுத்து, அங்குள்ள இராணுவத்தினர் முகாமிலேயே தனிமைப்படுத்தியுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
மூளைக்காய்ச்சல் தொற்றினால் பாதிக்கப்பட்ட இராணுவத்தினர் குழுவொன்றை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் ஒருவர் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
முகாமில் மேலும் முகாமில் இருக்கும் மேலும் 500 இராணுவ வீரர்களைத் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் பிரதேச சுகாதார திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த 11 ஆம் திகதி முதல் குறித்த இராணுவ முகாமில் காய்ச்சல் பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே படைமுகாமில் ஏற்பட்டுள்ள தொற்று பொதுமக்களிடையேயும் பரவலை தோற்றுவிக்கலாமென சந்தேகிகப்படுகின்றது.