ஆபிரிக்க பன்றிக்காய்ச்சல் தொடர்பாக புதிய வர்த்தமானி அறிவிப்பு.

by wamdiness

ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் நிலைமை காரணமாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் விதிக்கப்பட்டிருந்த விதிகளை தளர்த்தி புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமாலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்.

குறித்த வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஆரோக்கியமான விலங்குகளை கொண்டு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த வார இறுதிக்குள் பன்றிக்காய்ச்சல் பரவல் ஓரளவு குறைந்துள்ளது.

இதன்படி, விலங்கு மற்றும் கால்நடை வள தொழில்துறையை பாதுகாக்கும் நோக்கில், முன்னர் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திருத்தப்பட்ட வர்த்தமானி கடந்த 4ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்கும். புதிய வர்த்தமானியின்படி, கால்நடை மருத்துவரின் விலங்கு சுகாதார அறிக்கையுடன் தமது விலங்குகளை கொண்டு செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்