ரஷ்ய பிரதேசத்திற்குள் நீண்ட தூர இலக்குகளைத் தாக்கி அழிக்கும் அமெரிக்க ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான கட்டுப்பாடுகளை வெள்ளை மாளிகை நீக்கியுள்ளதாகக் சில ஆதாரங்களை மேற்கோள் காட்டி நியூயார்க் டைம்ஸ் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
இதேநேரம் ரஷ்யாவை தாக்க அமெரிக்கா வழங்கிய நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்த அமெரிக்க அதிபர் ஜோ பிடன் பச்சைக்கொடி காட்டியுள்ளார். அமெரிக்க அதிகாரி ஒருவர் இத்தகவலை உறுதி செய்துள்ளார்.
உக்ரைனின் நட்பு நாடுகள் ரஷ்யாவுக்குள் நீண்ட தூதர இலக்குகளை இலக்கு வைத்து தாக்குதலை நடத்துவதற்கு முன்னர் தங்கள் ஆயுதங்களை பயன்படுத்துவதற்கு உக்ரைனுக்கு தடை செய்திருந்தனர்.
இப்போது, உக்ரேனியப் படைகள் வரும் நாட்களில் ரஷ்ய இலக்குகளுக்கு எதிராக 306 கிலோ மீற்றர் தூரம் வரையிலான வரம்பைக் கொண்ட அமெரிக்கத் தயாரிப்பான ATACMS ரொக்கெட்டுகளைப் பயன்படுத்த உள்ளதாக ஆதாரங்கள் கூறுகின்றன.
இச்செய்திக்கு வெள்ளை மாளிகை உடனடியாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
ஜோ பிடனுக்குப் பதிலாக டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக வருவதற்கு சில மாதங்களுக்கு முன்பு இந்த அறிக்கை வந்துள்ளது.
ஜனவரி தொடக்கத்தில் பதவியேற்பதற்கு முன்பே உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவேன் என்று டிரம்ப் கூறினார்.
உக்ரைன் அமெரிக்க ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான வரம்புகளை தளர்த்துவது ஒரு பெரிய விரிவாக்கத்தை பிரதிபலிக்கிறது என்று ரஷ்யா எச்சரித்துள்ளது.