ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட அடிப்படை மனித உரிமை மனுக்கள் தொடர்பில் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளின் பிரகாரம் 311 மில்லியன் ரூபா நஷ்டஈடு அலுவலகத்திற்கு கிடைத்துள்ளதாக சட்டமா அதிபர் இன்று உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் இந்த அறிவித்தலை தெரியப்படுத்தியுள்ளார்
அத்துடன் இங்கு, பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த இழப்பீடுகள் எவ்வாறு வழங்கப்பட்டுள்ளன என்பது குறித்து நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டிருந்ததுடன் பிப்ரவரி 27-ம் திகதி மீண்டும் சம்பந்தப்பட்ட மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது