பா.ஜ.க. ஆட்சியில் பின்னடைவைச் சந்திக்கும் மகாராஷ்டிராவின் பொருளாதாரம்!

by adminDev2

பா.ஜ.க. ஆட்சியில் மகாராஷ்டிரா மாநிலத்தின் பொருளாதாரம் பின்னோக்கி செல்வதை காணமுடிவதாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

நேற்று மும்பையில் செய்தியாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், மகாராஷ்டிரா மாநிலம் நாட்டின் தொழில் மற்றும் சேவை துறையில் முன்னணி மாநிலமாக உள்ளதுடன், வேளாண்மையிலும் சிறந்து விளங்குவதாகவும் அவர் இதன்போது கூறியுள்ளார்.

இதேவேளை, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் மகாராஷ்டிராவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 9.4 இல் இருந்து 7.6 ஆக குறைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், அந்ம மாநிலத்தின் வேளாண்மை வளர்ச்சி 4.5 சதவீதத்தில் இருந்து 1.9 சதவீதமாக குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், சேவை துறையின் வளர்ச்சியும் 13 இல் இருந்து 8.3 ஆக வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்