96 வயதிலும் ஜிம்மில் உற்சாகமாக உடற்பயிற்சி செய்யும் மூதாட்டி
இவர், 96 வயதான ஹூவென் நோயென் தை.
அவர் உடற்பயிற்சி செய்யும் காணொளிகள் வியட்நாமில் வைரலாகியுள்ளன.
“நான் ஆரோக்கியமாக இருக்கிறேன், நான் சோர்வாக உணர மாட்டேன்” என்கிறார் இந்த பாட்டி.
இவருடைய பேரன் நம் வோ தா கூறுகையில், “காலை 5 மணிக்கு உடற்பயிற்சி செய்ய நாங்கள் ஒன்றாக செல்வோம்.
ஒவ்வொரு அமர்வும் சுமார் 45 நிமிடம் நீடிக்கும். காலையில், சுமார் 4.5 கி.மீ. தூரம் நாங்கள் பயிற்சி மேற்கொள்வோம்.
மாலை 5 மணியளவில் பாட்டி ஜிம் செல்வார்.
அவர் கார்டியோ மற்றும் டம்பிள் பிரெஸ் போன்ற இலகுரக எடை பயிற்சிகளை மேற்கொள்வார்.
ஒருவரின் துணையுடன் புல்-அப் மற்றும் டிப் மெஷின் போன்ற பயிற்சிகளை மேற்கொள்வதை அவர் மிகவும் விரும்புவார்” என்கிறார்.
பாட்டி உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை அவருடைய பேரன் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார், அவை விரைவில் வைரலாகிவிட்டன.
“அதைப் பார்த்து மக்கள் ஆச்சர்யமடைந்தனர்.
96 வயது பெண் ஒருவர் இன்னும் ஜிம் செல்வதைப் பார்த்து ஆச்சர்யப்பட்டனர்.
டிக் டாக் மற்றும் ஊடகங்களில் பார்த்து ஏராளமானோர் பாட்டியை பற்றி அறிந்தனர்.
ஜிம்மில் அவருடன் புகைப்படங்கள், வீடியோக்கள் எடுத்துக்கொள்ள பலரும் விரும்புவர்” என்கிறார் அவருடைய பேரன்.
“நான் மேலே இருந்து வரும் ஆசீர்வாதங்களை நம்பியிருக்கிறேன், அதனால் தான் நான் ஆரோக்கியமாக இருக்கிறேன்.
நான் காலையில் உடற்பயிற்சி செய்வேன், சமவிகித உணவை உட்கொள்கிறேன் அவ்வளவுதான்” என கூறுகிறார், ஹூவென் நோயென் தை
“விளையாட்டில் ஆர்வமாக ஈடுபடவும் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், என் பாட்டியை உதாரணமாக கொண்டு, பலரும் ஊக்கம் அடைவார்கள் என நம்புகிறேன்” என கூறுகிறார் நம் வோ தா.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)