40 சதவீத மக்கள் பாகிஸ்தானை விட்டு வெளியேற விரும்புவதாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரியவந்துள்ளது.
அதன்படி பாகிஸ்தான், கராச்சியில் உள்ள புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு மற்றும் டென்மார்க் வெளியுறவு அமைச்சு ஆகியவை இணைந்து பாகிஸ்தான் மக்களிடம் ஆய்வு நடத்தியுள்ளது.
இதில் கடந்த 2 ஆண்டுகளில் பாகிஸ்தானில் இருந்து அதிகம் பேர் இடம் பெயர்ந்துள்ளதுடன், ஐரோப்பாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களில் பாகிஸ்தானியர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாகவும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு சட்டவிரோதமாக இடம்பெயர்ந்த முதல் ஐந்து நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, சமூக பாதூப்பு இன்மை, வேலையின்மை பொருளாதார வீழ்ச்சி மற்றும் பயங்கரவாதம் ஆகியவை மக்கள் இடம்பெயர விரும்புவதற்கான காரணமாக அமைவதுடன் கடுமையான சிரமங்கள் மற்றும் உயிருக்கு ஆபத்து இருந்த போதிலும், சட்டவிரோத இடம்பெயர்வு அதிகரித்து வருவதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.