2024ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், நாடாளுமன்றத்தை தூய்மைப்படுத்துவோம் என்ற தொனிப்பொருளில் தேசிய மக்கள் சக்தி தனது தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பித்து, அதன்படி முழு நாடாளுமன்றத்திலும் 159 ஆசனங்களைக் கைப்பற்றியது.
அந்த 159 ஆசனங்களில் கடந்த முறை பாராளுமன்றத்தில் இல்லாத 157 உறுப்பினர்கள் இந்த ஆண்டு பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருப்பதுடன் அந்த மக்களில் பெரும்பான்மையானவர்கள் புதிய முகங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன், இவ்வருட நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியில இருந்து தெரிவு செய்யப்பட்ட 40 உறுப்பினர்களில் 09 பேர் புதிய முகங்கள் என்பதுடன், இலங்கை தமிழரசு கட்சியில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 8 உறுப்பினர்களில் 4 பேர் புதிய முகங்கள் ஆவர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மூன்று உறுப்பினர்களில் ஒரு உறுப்பினர் முதல் முறையாக பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளதுடன், ஏனைய கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் நால்வரும் பாராளுமன்றத்திற்கு புதியவர்கள். .
இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் இருந்து 13 பேர் பாராளுமன்றத்திற்கு புதியவர்களாகவும், 16 பேர் கம்பஹா மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு புதியவர்களாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
களுத்துறை மாவட்டத்தில் இருந்து 9 பேர் இவ்வருடம் முதல் தடவையாக பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் கண்டி மாவட்டத்தில் இருந்து 9 புதியவர்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் மாத்தளை மாவட்டத்தில் 4 பேரும், நுவரெலியா மாவட்டத்தில் 7 பேரும், மாத்தறை மாவட்டத்தில் 6 பேரும், அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 5 பேரும், யாழ்ப்பாண மாவட்டத்தில் 4 பேரும் இந்த பாராளுமன்ற தேர்தலில் தெரிவாகியுள்ளமையும் விசேட அம்சமாகும்.
மேலும், வன்னி தேர்தல் மாவட்டத்தில் 4 பேரும், திருகோணமலை மாவட்டத்தில் 3 பேரும், குருநாகல் மாவட்டத்தில் 12 பேரும், புத்தளம் மாவட்டத்தில் 7 பேரும், அனுராதபுரம் மாவட்டத்தில் இருந்து 8 பேரும் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
பொலன்னறுவை மாவட்டத்தில் இருந்து 4 பேர், பதுளை மாவட்டத்தில் 6 பேர், மொனராகலை மாவட்டத்தில் இருந்து 5 பேர், இரத்தினபுரி மாவட்டத்தில் 9 பேர், கேகாலை மாவட்டத்தில் இருந்து 7 பேர் இந்த வருடம் பாராளுமன்றத்திற்கு புதிய முகங்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வருடம் பாராளுமன்ற ஆசனங்களை வென்ற 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் கிட்டத்தட்ட 176 பேர் முதல் தடவையாக பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டமை விசேட அம்சமாகும்.
இதேவேளை, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட 92 முன்னாள் அமைச்சர்களுக்கு இந்த ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கிடைக்கவில்லை என்பது குறிப்பிடவில்லை.