பின்கதவால் சுமா: நாடகம் விரைவில் அரங்கேற்றம்!

by wp_fhdn

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வடமாகாணத்தில் படுதோல்வியை தமிழரசுக்கட்சி சந்தித்துள்ள நிலையில் தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றிற்கு மீளச்செல்லப்போவதில்லையென எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் தோல்வியடைந்த எம்.ஏ.சுமந்திரனுக்கு தேசியப் பட்டியல் ஆசனம் வழங்கப்படலாம் என தகவல்கள் வெளிவந்திருந்த நிலையில் தேசியப் பட்டியல் ஆசனம் மூலம் நாடாளுமன்றம் செல்லமாட்டேன் என்று எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவின் தீர்மானத்திற்கு கட்டுப்படுவேன் என தெரிவித்துள்ள நிலையில் மத்திய குழு கோரிக்கையின் பேரில் செல்வதாக நாடகமொன்றை அரங்கேற்ற முற்படுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இன்று யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடுகையில் மக்களால் தெரிவுசெய்யப்பட்டால் மட்டுமே நான் நாடாளுமன்றம் செல்வேன்

ஆனால் கட்சியின் மத்தியகுழுவே தேசியப் பட்டியல் ஆசனத்தை தீர்மானிக்கும் என்றும் கூறிய எம்.ஏ.சுமந்திரனிடம், ‘ஒருவேளை மத்திய குழு தேசியப் பட்டியலுக்காக உங்களைத் தெரிவுசெய்தால் என்ன செய்வீர்கள்’ என்று ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தார்கள்.

தமிழரசுக் கட்சியின் மத்தியகுழுவின் முடிவுக்கு முழுமையாகக் கட்டுப்படுவேன் என்று தெரிவித்ததுடன் யாழ்ப்பாணத்திலும், வன்னியிலும் தமிழரசுக் கட்சியின் தோல்வியை ஏற்றுக்கொள்வதாகவும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை எம்.ஏ.சுமந்திரன், தனது தோல்வி பற்றிக் குறிப்பிடும் பொழுது ‘மக்களின் தெரிவை மதிக்கிறேன், ஏற்றுக்கொள்கிறேன்’ என்று தெரிவித்தார்.

இதனிடையே தேர்தலில் தோல்வியடைந்த சக வேட்பாளர்களான சுகிர்தன்,சயந்தன் மற்றும் கிருஸ்ணவேணி ஆகியோரும் ஊடக சந்திப்பில் பிரசன்னமாகியிருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்