1
2024 ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் 667,240 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அதன்படி 2024 ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில்,
வாக்களிப்பதற்குத் தகுதி பெற்ற வாக்காளர்களின் எண்ணிக்கை – 17,140,354
வாக்களித்த வாக்காளர்களின் எண்ணிக்கை – 11,815,246
செல்லுபடியாகும் வாக்குகளின் எண்ணிக்கை – 11,148,006
நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை – 667,240
இந்நிலையில், இந்த ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்றதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.