பத்தாவது நாடாளுமன்றத்தின் பிரதமர் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியினுள் உள்ளக குழப்பங்கள் மூண்டுள்ளது.
கூடிய விருப்பு வாக்கினை பெற்ற விஜித ஹேரத் பிரதமராக வேண்டுமென கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ள போதும் தற்போதுள்ள பிரதமரான ஹரிணியை தொடர அனுர சிபார்சு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதனிடையே சபாநாயகராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்கவை நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
பிமல் ரத்நாயக்க தேசிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியலை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்திற்கு பிரவேசிக்க உள்ளார்.
எனினும் நாடாளுமன்றத்தில் சபைத் தலைவராக அமைச்சர் விஜித ஹேரத்தை நியமிக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் முதல் கூட்டம் வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது.
நிலையியற் கட்டளைகளின்படி, சபாநாயகர், பிரதி சபாநாயகர் உள்ளிட்ட முக்கிய பதவிகளுக்கு நாடாளுமன்றம் ஆரம்ப நாளிலேயே நியமிக்கப்பட வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.