4
மட்டு. புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான விண்ணப்பம் on Saturday, November 16, 2024
மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இச்செயற்பாட்டினை முழுமையாக நிறுத்தி மக்கள் ஆரோக்கியமான சூழலில் வாழ்வதற்கான வழியை விரைவாக செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். மேலும்,
ஊழலற்ற, சிறந்த ஆரோக்கியமான நாட்டினை கட்டியெழுப்ப தலைப்படும் தற்போதைய ஜனாதிபதியின் கட்சியில் தெரிவு செய்யப்பட்டுள்ள மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.பிரவு இச்செயற்பாட்டில் முன்னின்று செயற்படுவார் எனவும் மக்கள் அதிகம் நம்புகின்றனர்.