காலநிலை மாற்றம்: பேரழிவை ஏற்படுத்தும் சீர்கேடுகளுக்கு காரணம் பணக்காரர்களா?

காணொளிக் குறிப்பு, பில்லியனர்களின் சொகுசுப் படகுகள், தனியார் ஜெட்கள் போன்றவை ஆயிரம் மடங்கு கார்பனை உமிழ்கிறது என்று ஆக்ஸ்ஃபேம் கூறுகிறது

காலநிலை மாற்றம்: பேரழிவை ஏற்படுத்தும் சீர்கேடுகளுக்கு காரணம் பணக்காரர்களா?

உலகம் முழுவதும் மாசுபாட்டிற்கு காரணம் பணக்காரர்களா? ஆக்ஸ்ஃபேம் என்ஜிஓ-வின் அறிக்கையின்படி கூறவேண்டுமென்றால், ஆம்.

41 பில்லியனர்கள் ஏற்படுத்திய கார்பன் உமிழ்வை ஆய்வு செய்த அவர்கள், ஒரு சராசரி நபர் தன் வாழ்நாள் முழுவதும் ஏற்படுத்தும் கார்பன் உமிழ்வை பில்லியனர்கள் வெறும் 96 நிமிடங்களில் ஏற்படுத்துவதாக கூறுகின்றனர்.

ஏழைகளில் ஒருவர் உமிழும் கார்பனை விட ஒவ்வொரு பில்லியனர்களின் சொகுசுப் படகுகள், தனியார் ஜெட்கள் போன்றவை ஆயிரம் மடங்கு கார்பனை உமிழ்வதாக அந்த அறிக்கை கூறுகிறது.

இதுபோக பில்லியனர்கள் பெரும்பாலும் எண்ணெய், சுரங்கம், கப்பல், சிமெண்ட் போன்றவற்றில் முதலீடு செய்கின்றனர். இவை மிகப்பெரிய அளவில் கார்பனை உமிழ்கின்றன.

ஒரு சராசரி பில்லியனர் ஓராண்டில் செய்யும் முதலீட்டால் வெளியேற்றப்படும் கார்பனின் அளவுக்கு ஒரு சாதாரண நபர் கார்பன் உமிழ்வுக்கு காரணமாக வேண்டுமெனில், அவருக்கு 4 லட்சம் ஆண்டுகள் ஆகும் என்றும் ஆக்ஸ்ஃபேம் அறிக்கை கூறுகிறது.

ஆகவே காலநிலை மாற்றத்துக்கு மனித காரணிகள் உள்ளன. காலநிலை மாற்றம் அழிவுகரமான வானிலையை அதிகரிக்கிறது. இதில் அதிகம் பாதிக்கப்படுவது ஏழைகள் தான்.

ஏனெனில், தீவிர வானிலை பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் பெரும்பாலும் ஏழைகளே வசிக்கின்றனர். மேலும், இதனை சமாளிக்க அவர்களிடம் போதிய நிதி கிடையாது.

கார்பன் உமிழ்வை தடுக்க பணக்காரர்களின் முதலீடு, மாசை ஏற்படுத்தும் அவர்களின் சொகுசுப் படகுகள், தனியார் ஜெட்கள் போன்றவைக்கு வரி விதிக்கச் சொல்கிறது ஆக்ஸ்ஃபேம்.

இதன் மூலம் கிடைக்கும் பணத்தை காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராடவும், அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும் செலவிட வேண்டும் என்றும் சொல்கிறது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.