உண்மையான நல்லிணக்கத்தை அடைவதற்கு வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்

by wp_fhdn

உண்மையான நல்லிணக்கத்தை அடைவதற்கு வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் தமிழ்க் கட்சிகள் தனித்துப் போட்டியிட்ட பொதுத் தேர்தலில் வரலாற்றில் முதல் தடவையாக யாழ்ப்பாண மக்கள் தென்னிலங்கையை அடிப்படையாகக் கொண்ட தேசியக் கட்சிக்கு வாக்களித்துள்ளனர். இந்தத் தருணம் தேர்தல் முடிவுகளில் மாத்திரமின்றி, முழு நாட்டினதும் ஒற்றுமையை வெளிப்படுத்துவதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தல் முடிவுகள் தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் செய்துள்ள பதிவிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட வேறுபாடுகளை விட உண்மையான வேறுபாடுகள் எப்போதுமே அரசியல் சார்ந்தவை என்பதை இந்த தேர்தல் முடிவுகள் எமக்கு நினைவூட்டுகின்றன.

மேலும் இந்த மாற்றமானது மக்கள் பிளவுகளுக்கு அப்பால் செல்ல தயாராக இருப்பதைக் காட்டுகிறது. ஒன்றாக, நீடித்த நம்பிக்கையை உருவாக்கவும் உண்மையான நல்லிணக்கத்தை அடையவும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த புதிய ஐக்கியத்தில் இலங்கை செழிக்கட்டும். மேலும் அனைத்து இலங்கையர்களின் நலனுக்காகவும் தேசிய மக்கள் சக்தி மற்றும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க சேவையாற்றுவர் என்று நம்புகின்றோம் என அலி சப்ரி தனது பதிவில் மேலும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்