மஹிந்தவின் சாதனையை முறியடித்த பிரதமர் ஹரிணி
கொழும்பு தேர்தல் தொகுதியில் தேசிய மக்கள் சக்தியின் முதன்மை வேட்பாளராக போட்டியிட்ட பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய விருப்பு வாக்கு பட்டியலில் 655,289 வாக்குகளை பெற்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சாதனையை முறியடித்துள்ளார்.
விகிதாசார தேர்தல் முறைமையின் கீழ் தேர்தல் வரலாற்றில் பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளர் ஒருவர் விருப்பு வாக்குகளில் பெற்றுக் கொண்ட அதிகூடிய வாக்குகளாக பிரதமரின் விருப்பு வாக்குகள் காணப்படுகின்றன.
2020 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் குருநாகல் மாவட்ட முதன்மை வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 527,364 வாக்குகளைப் பெற்று அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றவராக கருதப்பட்டார்.
விருப்பு வாக்குப் பட்டியலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பெற்றுக் கொண்ட அதிகூடிய வாக்குகளை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய முறியடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.