துணை ஆயுதக்குழு முன்னாள்கள் வெளியே?

by admin

நடைபெற்று முடிந்த பத்தாவது நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு கிழக்கில் அரச படைகளுடன் சேர்ந்தியங்கிய பல முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தூக்கி வீசப்பட்டுள்ளனர்

மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) மற்றும் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) இருவரும் படுதோல்வியடைந்துள்ளனர்.

அதேவேளை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரமும்; தோல்வியைத் தழுவியுள்ளார்.

அதேவேளை யாழில் முன்னாள் அமைச்சரும் ஈழமக்கள் ஜனநாயக்கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா தனது 30 வருட அரசியல் வாழ்க்கையில் படுதோல்வியடைந்துள்ளார்.

கடந்த 30 வருடங்களில் நடைடபெற்ற தேர்தல்களில் வெற்றிபெற்று ஆட்சி புரிந்த அரசாங்கங்களுடன் இணைந்து பல்வேறு அமைச்சுப்பதவிகளை டக்ளஸ் வகித்திருந்தார்.

அதேவேளை அங்கயன் இராமநாதன்,தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் ஜனநாயகப்போராளிகள் கட்சியினர் என பலரும் படுதோல்வியடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்