நிறைவடைந்த நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து தேசிய மக்கள் சக்தி சார்பில் கருணானந்தன் இளங்குமரன், சண்முகநாதன் பவானந்தராஜா, ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் ஆகிய மூவர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவாகியுள்ளனர்.
அதேவேளை இலங்கை தமிழரசு கட்சி சார்பில் சிவஞானம் சிறீதரன் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியுள்ளார்.
அத்துடன் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவாகியுள்ளார்.
மேலும் சுயேட்சை குழு 17 சார்பில் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதனிடையே வன்னி மாவட்டத்தில் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் துரைராசா ரவிகரன் இருவரே வெற்றி பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள துரைராசா ரவிகரன் இன்று காலை இறுதிப்போரில் உயிரிழந்த மக்கள் நினைவாக அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கு சென்று வணக்கம் செலுத்தியிருந்தார்.
திருகோணமலையில் குகதாசனும் மட்டக்களப்பில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட இரா.சாணக்கியன், ஞா.சிறிநேசன் மற்றும் மருத்துவர் சிறீநாத் உள்ளிட்டவர்கள் வெற்றிபெற்றுள்ளனர்;.