1
2024ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியிலிருந்து கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய 655,289 விருப்பு வாக்குகளைப் பெற்று கொழும்பு மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.
இந்த எண்ணிக்கையான வாக்குகள் இலங்கையின் பாராளுமன்றத் தேர்தல் வரலாற்றில் ஒரு வேட்பாளர் பெற்ற அதிகூடிய வாக்குகளாக வரலாற்றில் இடம் பெற்றுள்ளது.
இதற்கு முன்னர் அதிக விருப்பு வாக்குகளை மஹிந்த ராஜபக்ஷ பெற்றிருந்தார்.
அவர் 2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டு 527,364 வாக்குகளைப் பெற்றிருந்தார்.
இந்நிலையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அதனை முறியடித்து 6 லட்சத்திற்கும் அதிகளவான விருப்பு வாக்குகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.