4
இலங்கைக்கு மேற்கே கடற்பகுதியில் சுமார் 60 கிலோ போதைப்பொருளை ஏற்றிச் சென்ற மீன்பிடி படகு ஒன்று தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும், கப்பலில்
இருந்த 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு மேற்கே உள்ள உயர் கடலில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் மூலம், உள்ளூர் பல நாள் மீன்பிடி இழுவை படகு மறித்து போதைப்பொருள் கடத்தியதாக சந்தேகத்தின் பேரில் 06 பேர் இன்று (14) கைது செய்யப்பட்டதாக அது கூறியுள்ளது.
அந்த இழுவை படகில் சுமார் 60 கிலோகிராம் போதைப்பொருள் இருந்ததாக சந்தேகிக்கப்படுவதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் மற்றும் போதைப் பொருட்களுடன் இழுவை படகு கடற்படையினரால் மேலதிக விசாரணைக்காகவும் சட்ட நடவடிக்கைகளுக்காகவும் கரைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.