தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த பெண் அதிகாரி திடீர் சுகயீனமுற்று உயிரிழப்பு!

by admin

தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த பெண் அதிகாரி திடீர் சுகயீனமுற்று உயிரிழப்பு! கெஸ்பேவ, பொல்ஹேன பிரதேசத்தில் உள்ள வாக்கெடுப்பு நிலையத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த பெண் அதிகாரி ஒருவர் திடீர் சுகயீனமுற்று உயிரிழந்துள்ளதாக கெஸ்பேவ பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த சம்பவம்  நேற்று  புதன்கிழமை (13) இரவு இடம்பெற்றுள்ளது.

கொழும்பு 12 மேல் நீதிமன்றில் கடமையாற்றும் இந்துருவகொட, பயாகலை பிரதேசத்தை சேர்ந்த  48 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இந்த பெண் அதிகாரி நேற்றைய தினம் இரவு வாக்கெடுப்பு நிலையத்தில் மேலும் இரு அதிகாரிகளுடன் இணைந்து தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென சுகயீனமுற்றுள்ளார்.

இதனையடுத்து, இந்த பெண் அதிகாரி பிலியந்தலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கெஸ்பேவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்