சிறையில் வீடியோ கேம், சொகுசு சோஃபா – அமெரிக்காவில் கைதிகள் மறுவாழ்வுக்கு நவீன அணுகுமுறை
சிறையில் வீடியோ கேம், சொகுசு சோஃபா – அமெரிக்காவில் கைதிகள் மறுவாழ்வுக்கு நவீன அணுகுமுறை
இந்த அமெரிக்க சிறையில், கைதிகள் சோஃபாவில் அமர்ந்து சாவகாசமாக வீடியோ கேம் விளையாடலாம். இங்கு வோடி என்ற பூனையும் ஒரு மீன் தொட்டியும் உள்ளன.
அமெரிக்காவில் பல லட்சம் சிறைக் கைதிகள் உள்ளனர். ஆனால், இங்கு 64 கைதிகள் குட்டி ஸ்கேண்டிநேவியா என்ற ஒரு சோதனைச் சிறையில் வாழ்கின்றனர்.
வன்முறைச் சம்பவங்கள் குறைவாகப் பதிவாகும், நார்வே, சுவீடன் சிறைகளை ஒத்த மாதிரியில் இது உருவாக்கப்பட்டுள்ளது.
“மற்ற சிறைகளில் கைதிகள் கண்ணுக்கு எளிதாக ஆயுதங்கள் தென்பட்டன. ஆனால், இங்கு நாங்கள் அத்தகைய பிரச்னையை எதிர்கொள்வதில்லை. சிறையில் சாந்தமான சூழல் நிலவுவதே அதற்குக் காரணமென்று நான் கருதுகிறேன்,” என்கிறார் சிறை அதிகாரியான மோர்ட்டன்.
விமர்சகர்கள், இது குற்றவாளிகளுக்கு வெகுமதி அளிக்கும் செயல் என்கின்றனர். ஆனால், இது அனைவருக்கும் நன்மை செய்வதாக ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகின்றனர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.