கனடாவில் வாகனங்கள் மீது கல்வீச்சு மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் ஒன்றாறியோ மாகாணம் மார்க்கம் பகுதியில் கற்கள் வீசி எறியப்பட்டதனால் இரண்டு பேர் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த செப்டம்பர் மாதம் 20ம் திகதி முதல் இதுவரையில் வாகனங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கல்வீச்சு தாக்குதல்கள் தொடர்பில் சுமார் 11 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
குறிப்பாக அதிவேக நெடுஞ்சாலையில் பயணம் செய்யும் வாகனங்கள் மீது இவ்வாறு கற்கள் வீசி எறியப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் போலீசார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த கல்வீச்சு தாக்குதல் தொடர்பான காணொளிகளும் அண்மையில் வெளியிடப்பட்டிருந்தது.
அப்பாவி மக்கள் வாகனங்களில் பயணம் செய்யும்போது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் கண்டிக்கப்பட வேண்டியவை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.