தரமற்ற மருந்து விநியோகம் தொடர்பில் 18 அமைச்சர்களிடம் விசாரணை !

by wp_shnn

on Tuesday, November 12, 2024

அரசாங்க வைத்தியசாலைகளுக்கு தரமற்ற மருந்துகளை விநியோகித்தமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக, அப்போது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த 18 அமைச்சர்களிடமும் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு மாளிகாகந்த நீதவான் லொச்சனி அபேவிக்ரம உத்தரவிட்டுள்ளார்.

அந்தவகையில் கெஹலிய ரம்புக்வெல்ல சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவையில் அங்கம் வகித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன, முன்னாள் அமைச்சர்களான திரான் அலஸ், மஹிந்த அமரவீர, விஜயதாச ராஜபக்ஷ, ஹரின் பெர்னாண்டோ, ரொஷான் ரணசிங்க, நிமல் சிறிபால, அமைச்சரவையை பிரதிநிதித்துவப்படுத்திய 18 பேரிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்