அமைதிக்கு குந்தகம்:கைதுக்கு உத்தரவு!

by sakana1

நாளை மறுதினம் நாடாளுமன்ற தேர்தலிற்கு நாடு தயாராகியுள்ள நிலையில் அமைதியான தேர்தலை நடத்த அரசியல் கட்சிகளும், சுயேச்சை குழுக்களும், பொது மக்களும் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

“வாக்காளர்கள் நாளைமறுதினம் சுயமாகச் சிந்தித்து வாக்களிப்பதற்காகவே தேர்தல் பிரசாரங்கள் அனைத்தும் நேற்று நள்ளிரவுடன் முடிவுறுத்தப்பட்டுள்ளன. வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் இன்றும், நாளையும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதனிடையே வாக்குச் சாவடியில் புகைப்படம் எடுத்தல், காணொளி எடுத்தல், தொலைபேசிகளை பயன்படுத்தல், ஆயுதங்களை வைத்திருத்தல் என்பன தடை செய்யப்பட்டுள்ளது.

பொதுத் தேர்தலில் இருவகையான வாக்குசீட்டுக்கள் வழங்கப்படவுள்ளன. பொலன்னறுவை, மொனராகலை, கேகாலை மாவட்டங்களுக்கு ஒரே நிரலிலான வாக்கு சீட்டுக்களும், ஏனைய 19 தேர்தல் மாவட்டங்களுக்கும் இரு நிரல்களைக் கொண்ட வாக்கு சீட்டுக்களும் வழங்கப்படும்.

வாக்களித்த பின்னர் பொது மக்களை வீட்டில் இருக்குமாறு கோருகிறோம். வாக்களித்த பின்னர் வாக்குச் சாவடிகள் மற்றும் வீதிகளில் கூடியிருக்க வேண்டாம். வீதியில் ஒன்றுகூடி தேவையற்ற பிரச்சினைகள் ஏற்பட்டால் சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்