வீடுகளை உடைத்து பெறுமதியான பொருட்களைத் திருடியவர் கைது கல்கிஸ்ஸை மற்றும் மொரட்டுவை ஆகிய பிரதேசங்களில் உள்ள வீடுகளை உடைத்து பெறுமதியான பொருட்களைத் திருடியதாகக் கூறப்படும் சந்தேக நபரொருவர் நேற்று திங்கட்கிழமை (11) கைது செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்தின் தெற்கு பிராந்திய பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
மேல் மாகாணத்தின் தெற்கு பிராந்திய பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் இரத்மலானை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் மொரட்டுவை பிரதேசத்தில் வசிக்கும் 38 வயதுடையவர் ஆவார்.
சந்தேக நபரிடமிருந்து 04 மடிக்கணினிகள், கைக்கடிகாரம், எரிவாயு சிலிண்டர் மற்றும் துவிச்சக்கரவண்டி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து, சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.