பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் அவர்களின் நினைவுசுமந்த உதைபந்தாட்டப் போட்டி . தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் வளர்ச்சிக்கும், தமிழ்மக்களின் அரசியல் பலத்திற்கும் மலையாக நின்று, இறுதி மூச்சுவரை விடுதலைக்காக பயணித்து தன்னை அர்ப்பணித்துக்கொண்ட விடுதலைப்புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் அவர்களின் நினைவுசுமந்த உதைபந்தாட்டப் போட்டி கடந்த சனிக்கிழமை 09.11.2024ஆம் திகதி Dormagen நகரில் மிகச் சிறந்த முறையில் நடைபெற்றது.
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனியின் மத்திய மாநிலப் பொறுப்பாளர்களில் ஒருவராகிய திரு. சின்னையா நாகேஸ்வரன் அவர்கள் பொதுச்சுடரினை ஏற்றிவைத்த பின்னர் ஈகைச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டது. மலர்மாலை அணிவித்த பின்னர் அகவணக்கத்தோடு உதைப்பந்தாட்டப் போட்டிகள் ஆரம்பமாகியது.
நடுவர்களது தீர்வுக்கமைய TSV Ennepetal முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது. தொடர்ந்து TTFC Frankfurt இரண்டாம் இடத்தினையும் SC Hamm மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டன.
நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலோடும் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் எனும் தாரகமந்திரத்தோடும் 2024 ஆம் ஆண்டுக்கான சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் நினைவுக்கிண்ண போட்டி இனிதே நிறைவு பெற்றது.